மாமல்லபுரம் அருகே கார் கவிழ்ந்து சென்னை கல்லூரி மாணவி பலி


மாமல்லபுரம் அருகே கார் கவிழ்ந்து சென்னை கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 5 July 2019 3:15 AM IST (Updated: 5 July 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காடு என்ற இடத்தில் காரின் குறுக்கே மாடுகள் கூட்டம் புகுந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

மாமல்லபுரம்,

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரிதா (வயது 22). இவர் சென்னையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர் கார்த்திக் என்பவரது காரில் சக நண்பர்கள் 5 பேருடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றார்.

பின்னர் அங்கு இருந்து மீண்டும் இ.சி.ஆர். சாலை வழியாக அனைவரும் காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தனர். மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காடு என்ற இடத்தில் காரின் குறுக்கே மாடுகள் கூட்டம் புகுந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த பிரிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த கார்த்திக், அஸ்வின், பிராங்க்லின் ஆகியோர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த 3 பேரும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பிரிதாவுடன் வந்த ஆண் நண்பர்கள் அனைவரும் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருபவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் விசாரித்து வருகிறார்.


Next Story