திருமருகல் பகுதியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் பார்வையிட்டார்
திருமருகல் பகுதியில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் குடிமராமத்து பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி, பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் குளங்கள், ஏரிகள் வாய்க்கால்கள் ஆகியவற்றை தூர்வாரி அதன் மூலம் மழை நீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2019-20-ம் ஆண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,829 பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.16 கோடியே 37 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை அந்தந்த பாசனதாரர்களே விவசாயிகள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள், நீர் ஒழுங்கிகள் பழுது நீக்குதல் மற்றும் புதிதாக அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நிலத்தடி நீர் மட்டம்
இந்த பணிகளை மேற்பார்வையிட பொதுப்பணித்துறை சார்பில் பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பணிகள் நிறைவடைவதன் மூலம் மழைநீர் சேகரிக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்படும். குடிமராமத்து திட்டத்தின் கீழ் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் 3 கட்டுமான பணிகள் மற்றும் 3 அடைப்பு பலகை அமைக்கும் பணி உள்ளிட்ட 6 பணிகள் ரூ.93 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.
திட்ட செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசன் குளம்
அதைத்தொடர்ந்து திருமருகல் பகுதியில் உள்ள அரசன்குளம் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு, நிலத்தடி நீர் பெருகியிருப்பதையும், பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கரையிருப்பு சேகல்-நாட்டார்மங்களம் சாலை மேம்பாட்டு பணிகளையும், பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளையும் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் லதா மகேஷ்கனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, இளங்கோவன் (கி.ஊ), நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், தாசில்தார் சங்கர், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story