திருவோணம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


திருவோணம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 July 2019 4:30 AM IST (Updated: 5 July 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

திருவோணம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள தோப்புவிடுதி புதுத்தெரு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தரிசனம் செய்யவரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். இதற்காக கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த கோவிலின் முகப்பு கதவின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து எடுத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு, உண்டியலை அருகே உள்ள ஒரு வாய்க்காலில் வீசிவிட்டு தப்பி சென்றனர்.

வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்த திருவோணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story