இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் சென்றால் ஓட்டுனர் உரிமம் ரத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் சென்றால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரித்தார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்துகள் பற்றி விளக்கப்படம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேசியதாவது:-
சிமெண்டு ஆலை கனரக வாகனங்களின் பக்கவாட்டில், சம்பந்தப்பட்ட நிறுவன அடையாள எண்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும். சிமெண்டு தொழிற்சாலை கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு செல்லக்கூடாது. வாகனத்தின் பின்புறம் கட்டாயமாக தார்ப்பாய் முழுமையாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். முன்னே செல்லும் வாகனத்தை முந்திச் செல்லும் போது முறையான சிக்னல் அளித்து முன்னேற வேண்டும்.
வாகனங்களை குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் இயக்கக்கூடாது. இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இரு சக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் சென்றால் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சிமெண்டு ஆலை அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story