தனியார் மயமாக்க எதிர்ப்பு: ரெயில்வே சங்கத்தினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்


தனியார் மயமாக்க எதிர்ப்பு: ரெயில்வே சங்கத்தினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 July 2019 10:45 PM GMT (Updated: 4 July 2019 10:04 PM GMT)

ரெயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் ரெயில்வே ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

ரெயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் ரெயில்வே ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு ரெயில்வே மஸ்தூர் சங்கம் (எஸ்.ஆர்.எம்.யு.) சார்பில் நாகர்கோவில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நேற்று 2-வது நாளாகவும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் சுதர்சனன் தலைமை தாங்கினார். செயலாளர் பால்பாண்டியன், பொருளாளர் நடராஜன், கோட்ட செயலாளர் கோபி கிருஷ்ணன் மற்றும் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து, கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என ரெயில்வே சங்கத்தினர் தெரிவித்தனர்.

Next Story