அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் தொழிலாளர் உதவி ஆணையாளர் அறிக்கை


அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் தொழிலாளர் உதவி ஆணையாளர் அறிக்கை
x
தினத்தந்தி 4 July 2019 11:25 PM GMT (Updated: 4 July 2019 11:25 PM GMT)

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் தொழிலாளர் உதவி ஆணையாளர் அறிக்கை உத்தரவிட்டு உள்ளார்.

நெல்லை,

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என நெல்லை தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூகபாதுகாப்பு திட்டம்) மின்னல்கொடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையிலும் முறைப்படுத்தும் நோக்கத்திலும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது.

கட்டுமானம் உடல் உழைப்பு, ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்யலாம்.

ஏற்கனவே பதிவு செய்த தொழிலாளர்கள் பதிவில் அவர்களது ஆதார் எண்ணை முழுமையாக இணைக்க வேண்டும் என சென்னை தொழிலாளர் ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.

இதுவரை ஆதார் அட்டை நகல் தாக்கல் செய்யாத தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பதிவில் ஆதார் எண்ணை சேர்க்கும் பொருட்டு ஆதார் அட்டை நகலும், வாரிய அட்டை நகலையும் இணைத்து கொடுக்க வேண்டும்.

அந்த நகலில்களை ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகம், இரண்டாவது தளம், பிளாக் எண்-39, வசந்தம் காலனி, திருமால் நகர் என்ற முகவரியில் உள்ள நெல்லை தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story