ராமநத்தம் அருகே, நாய்கள் கடித்து மான் செத்தது


ராமநத்தம் அருகே, நாய்கள் கடித்து மான் செத்தது
x
தினத்தந்தி 5 July 2019 4:45 AM IST (Updated: 5 July 2019 5:08 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே நாய்கள் விரட்டி விரட்டி கடித்ததில் மான் செத்தது.

ராமநத்தம், 

சிறுபாக்கம் அருகே நாங்கூர் காப்புக்காட்டில் ஏராளாமான மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கடும் வறட்சி காரணமாக காப்புக்காட்டில் உள்ள நீர், நிலைகள் அனைத்தும் தற்போது தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வபோது காட்டைவிட்டு வெளியேறி கிராமபுறங்களுக்குள் புகுந்து வருகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் சில நேரங்களில் வாகனங்கள் அல்லது ் நாய்களிடம் சிக்கி உயிரிழந்து வருகின்றன. இந்த நிலையில் தண்ணீர் தேடி் நாங்கூர் காப்புக்காட்டில் இருந்து வெளியேறி மான் ஒன்று ராமநத்தம் அருகே மேல்கல்பூண்டி கிராமத்துக்குள் நேற்று புகுந்தது.

அப்போது அங்கு சுற்றித்திரிந்த நாய்கள் அந்த மானை விரட்டி விரட்டி கடித்தன. இதில் அந்த மான் பலத்த காயம் அடைந்தது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் படுகாயம் அடைந்த மானை மீட்டு சிகிச்சைக்காக தொழுதூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மான் செத்தது. இதையடுத்து வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் மானை உடல் கூறு செய்து காப்புக்காட்டில் புதைத்தனர்.

Next Story