அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு அமல்படுத்த கோரிக்கை


அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு அமல்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 5 July 2019 4:00 AM IST (Updated: 5 July 2019 5:39 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பரமக்குடி,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும்ெ-உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் காலை பள்ளிக்கு வந்தவுடன் தங்களது ஆதார் எண், கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்த பின்பு திரையில் அந்த ஆசிரியரின் புகைப்படம் தோன்றுகிறது. அதில் ஆசிரியர் எத்தனை மணிக்கு பள்ளிக்கு வந்தார் என்ற விவரம் வருகிறது. அதே போல் மாலையில் பள்ளி முடிந்து செல்லும்போதும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த முறையால் ஆசிரியர் எத்தனை மணிக்கு வெளியே செல்கிறார் என்ற விவரம் வந்துவிடும். இதன் மூலம் ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு பள்ளிகளுக்கு வந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. மேலும் விடுப்பு எடுக்கும் போது வருகைப் பதிவில் வரவில்லை என காட்டும். ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்களின் சம்பள பட்டியலுடன் அவர்களின் வருகைப்பதிவேட்டையும் பிரிண்ட் எடுத்து கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்களின் வருகைப் பதிவேட்டின்படி அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் பள்ளிக்கல்வித் துறை கண்காணிக்கிறது.

இந்த முறையால் கல்வித் துறையில் முறைகேடுகள் நடப்பது தவிர்க்கப்படுகிறது என கூறுகின்றனர். இது பெற்றோர்கள், பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த திட்டத்தை தமிழக அரசு அனைத்துதொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களிலும் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story