கடலில் மீன்வளத்தை பாதுகாக்க சதுர கண்ணி வலையில் மீன்பிடிப்பது குறித்து பயிற்சி


கடலில் மீன்வளத்தை பாதுகாக்க சதுர கண்ணி வலையில் மீன்பிடிப்பது குறித்து பயிற்சி
x
தினத்தந்தி 5 July 2019 6:07 AM IST (Updated: 5 July 2019 6:07 AM IST)
t-max-icont-min-icon

கடலில்மீன்வளத்தை பாதுகாக்கும் விதமாக சதுர கண்ணி வலையில் மீன்பிடிப்பது குறித்துமீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுச்சேரி,

கடலில் மீன்வளத்தை பெருக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 60 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல் சுருக்கு வலையினால் சிறு மீன் குஞ்சுகளும் அடியோடு அழிந்து விடுவதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து சுருக்கு வலைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த வலை பயன்பாட்டை தடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதேபோல் டைமண்ட் வலை எனப்படும் செவ்வக கண்ணி வலை மூலம் மீன் பிடிக்கும்போது மீன் குஞ்சுகளும் பிடிக்கப்பட்டு மீன்வளம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து புதுவை அரசின் மீன்வளத்துறை, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் புதுவை மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது செவ்வக கண்ணி வலை மற்றும் சதுரகண்ணி வலை மூலம் மீன்பிடித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

சதுர கண்ணி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும்போது சிறிய வகை மீன்கள் பாதுகாக்கப்படுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த செயல் விளக்க பயிற்சியின்போது மீன்வளத்துறை இயக்குனர் முனுசாமி, இணை இயக்குனர் தெய்வசிகாமணி, உதவி இயக்குனர் சாஜிமா, துணை இயக்குனர் தனசேகரன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி வேல்விழி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story