செங்கோட்டை பகுதி விவசாயிகள் பிரதமர் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
செங்கோட்டை பகுதி விவசாயிகள், பிரதமர் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி? என தாசில்தார் ஒசானா பெர்னாண்டோ தெரிவித்து ள்ளார்.
செங்கோட்டை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பாரத பிரதமரின் கிசான் சமான்நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு தகுதியான விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் வாங்கும் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் புகைப்படம் ஒட்டப்பட்ட பயனாளிகளின் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு முன்பக்க நகல், குடும்ப அட்டை நகல், கணினி பட்டா பத்திர நகல், வில்லங்க சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் பட்டா மாற்றம் செய்யப்படாமல் இருக்கும் விவசாயிகள் வாரிசு அடிப்படையிலும் அல்லது கிரய ஆவணங்களின் அடிப்படையிலும் பட்டா மாற்றம் செய்வதற்கு மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story