அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பட்ஜெட் - எடியூரப்பா சொல்கிறார்


அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பட்ஜெட் - எடியூரப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 6 July 2019 4:18 AM IST (Updated: 6 July 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பட்ஜெட் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

மத்திய பட்ஜெட் குறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தொழிலாளர்கள், பெண்கள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்து பிரிவு மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றும் வகையில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் விவசாயிகள் சங்கம் தொடங்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது ஆகும். ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. சிறு வியாபாரிகளுக்கு ‘மான்தன்‘ என்ற பெயரில் ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு 2 கோடி வீடுகள், நகர்ப்புறத்தில் 81 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமல், ரூ.80 ஆயிரத்து 250 கோடியில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் நீளத்திற்கு கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது.

மொத்தத்தில் இந்த பட்ஜெட், வளர்ச்சிக்கு உகந்த, அனைத்துதரப்பு மக்களையும் உள்ளடக்கிய மற்றும் பொருளாதாரத்தை பலப்படுத்தக்கூடியது ஆகும். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


Next Story