பாட்டிலுக்கு ரூ.1 முதல் ரூ.3 வரை அதிகரிப்பு: புதுச்சேரியில் மதுபான விலை உயருகிறது, அமைச்சரவை முடிவு


பாட்டிலுக்கு ரூ.1 முதல் ரூ.3 வரை அதிகரிப்பு: புதுச்சேரியில் மதுபான விலை உயருகிறது, அமைச்சரவை முடிவு
x
தினத்தந்தி 6 July 2019 5:15 AM IST (Updated: 6 July 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மதுபான விலை பாட்டிலுக்கு ரூ.1 முதல் ரூ.3 வரை உயர்த்தி அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை அமைச்சரவை கூட்டம் காபினெட் அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் எஸ்.பி.சரண், அசோக்குமார், விவேக்குமார் பாண்டா, ஜவகர், அருண், பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் அயல்நாட்டு மதுபான வகைகளின் விலை குறைவாகவே உள்ளது. தமிழகத்தை ஒப்பிடும்போது இங்கு 60 சதவீதம் குறைவான விலையிலேயே விற்கப்படுகிறது. இந்த விலையில் மாற்றம் கொண்டுவர உள்ளோம்.

அதாவது விற்பனையாளருக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் பாட்டில் ஒன்றுக்கு ரூ.1 முதல் ரூ.3 வரை விலை அதிகரிக்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று முன்தினம் சாராய விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story