மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் சூரியசக்தி மூலம் கூடுதலாக 1.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி - அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்


மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் சூரியசக்தி மூலம் கூடுதலாக 1.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி - அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 July 2019 4:55 AM IST (Updated: 6 July 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன வளாகத்தில் சூரிய சக்தி மூலம் கூடுதலாக 1.2 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தார்.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவன தலைமை அலுவலகத்தில், 1.2 மெகாவாட் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து வாகன நிறுத்த கட்டணத்தை மெட்ரோ பயண அட்டை மூலம் செலுத்தும் ‘ஆப்னா பே’ திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு தேவையான மின்சாரத்தை, சூரிய சக்தி மூலம் அந்த நிறுவனமே உற்பத்தி செய்து கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சூரிய சக்தி மூலம் 4 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது கூடுதலாக சூரிய சக்தி மூலம் 1.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1.6 கோடி சேமிக்க முடியும். மேலும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள காலியிடங்களிலும், மேற்கூரைகளிலும் சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மெட்ரோ ரெயில் முதல்கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டது. 2-ம் கட்ட பணிக்கான ஒப்பந்த நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story