தூத்துக்குடியில் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்


தூத்துக்குடியில் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 7 July 2019 4:00 AM IST (Updated: 6 July 2019 10:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், பணியில் இருக்கும் போது மரணமடைந்தவர்கள் ஆகியோரது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வு கால பலன்கள் பெறுவதில் ஏற்படுகின்ற குறைகளை நேரடியாக கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றும் வகையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஓய்வூதிய தாரர்கள் அவர்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளை, அவர்கள் கடைசியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பதவி மற்றும் அலுவலகத்தின் பெயர், ஓய்வுபெற்ற நாள், ஓய்வூதிய கொடுப்பாணை எண், ஓய்வூதியம் பெற்றுவரும் கருவூலத்தின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண், கோரிக்கை எந்த அலுவலரிடம் நிலுவையில் உள்ளது என்பன போன்ற விவரங்களுடன் வருகிற 19-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 2 பிரதிகளில் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

19-ந் தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பித்த ஓய்வூதியர்கள் அடுத்த மாதம் 16-ந் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
1 More update

Next Story