சட்டம்-ஒழுங்கு, குற்றத்தடுப்பு நடவடிக்கை குறித்து கோவையில் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனை


சட்டம்-ஒழுங்கு, குற்றத்தடுப்பு நடவடிக்கை குறித்து கோவையில் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனை
x
தினத்தந்தி 7 July 2019 4:15 AM IST (Updated: 7 July 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து கோவையில் தமிழக டி.ஜி.பி. திரிபாதி, போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கோவை,

தமிழக போலீஸ் டி.ஜி.பி. யாக திரிபாதி பொறுப்பேற்ற பிறகு நேற்று முதன்முறையாக கோவை வந்தார். அவர், கோவை போலீஸ் பயிற்சி மையத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதில் மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, கோவை நகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், திருப்பூர் நகர கமிஷனர் சஞ்சய்குமார், சேலம் நகர கமிஷனர் செந்தில்குமார், கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன், சேலம் சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சுஜித்குமார் (கோவை), தீபா கணிக்கர்(சேலம்), கலைசெல்வன் (நீலகிரி), கயல்விழி (திருப்பூர்), சக்தி கணேஷ் (ஈரோடு), அருள் அரசு (நாமக்கல்), பண்டித் கங்காதர் (கிருஷ்ணகிரி), ராஜன் (தர்மபுரி) ஆகியோர் கலந்துகொண்டனர்.

குற்றத்தடுப்பு நடவடிக்கை

கூட்டத்தில், மேற்கு மண்டல பகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கவுரவக்கொலைகள், பாலியல் குற்றங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், கொலை, கொள்ளைகள் உள்ளிட்டவற்றை தடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு டி.ஜி.பி. திரிபாதி சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story