மடத்துக்குளம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
மடத்துக்குளம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மடத்துக்குளம்,
மடத்துக்குளம் அருகே உள்ள சங்கராமநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 11,12,13,14,15, ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதி ருத்ராபாளையம் ஆகும். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சங்கராமநல்லூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் ருத்ராபாளையம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்துள்ளது. ஏற்கனவே இதுகுறித்து பலமுறை சங்கராமநல்லூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ருத்ராபாளையம் பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் ருத்ராபாளையம் பஸ் நிலையம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் மடத்துக்குளத்தில் இருந்து ருத்ராபாளையத்துக்கு வந்த 2 பஸ்கள் செல்ல முடியாமல் அங்கேயே நிறுத்தப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்ததும் குமரலிங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோஷிலின் அந்தோணியம்மாள், சங்கராமநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் சிவகாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அவர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
ருத்ராபாளையம் கிராமத்தில் 5 வார்டுகள் உள் ளன. இந்த 5 வார்டுகளில் வாரத்திற்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதுவும் எப்போது குடிநீர் வினியோகிக்கப்படுகிறது என்பது சரிவர பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பெரும்பாலான பொதுமக்கள் வேலைக்கு சென்ற பிறகு குடிநீர் வினியோகிக்கப்படுவதால் அதை பிடிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு குடிநீர் இணைப்பு, வீட்டுவரி ரசீதையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் சிவகாமி கூறும் போது, குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் வைத்து தண்ணீரை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறையாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், மறியலை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பொதுமக்கள்சாலை மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story