கும்மிடிப்பூண்டி அருகே அரிசி வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு


கும்மிடிப்பூண்டி அருகே அரிசி வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
x

கும்மிடிப்பூண்டி அருகே அரிசி வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மாநெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 52). அரிசி கடை உரிமையாளர் உடல் நிலை பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகன் யுவராஜ் (24) மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சென்னையில் தங்கி உள்ளனர். முரளியின் வீடு கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டிருந்தது.

நேற்று காலை வீட்டின் வெளியே சுத்தம் செய்வதற்கு லட்சுமி (50) என்பவர் வந்தார். அப்போது முரளியின் வீட்டின் ஓடுகள் உடைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து முரளியின் மகன் யுவராஜ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் நேரில் வந்து பார்த்தபோது, வீட்டின் மேல் பகுதியில் இருந்த ஓடுகள் உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து யுவராஜ் அளித்த புகாரின்பேரில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story