மாவட்ட செய்திகள்

அம்பத்தூரில் டாஸ்மாக் பாரில் ரவுடி வெட்டிக்கொலை; 5 பேருக்கு வலைவீச்சு + "||" + Rowdy's murder in a tasmack

அம்பத்தூரில் டாஸ்மாக் பாரில் ரவுடி வெட்டிக்கொலை; 5 பேருக்கு வலைவீச்சு

அம்பத்தூரில் டாஸ்மாக் பாரில் ரவுடி வெட்டிக்கொலை; 5 பேருக்கு வலைவீச்சு
அம்பத்தூரில், டாஸ்மாக் பாரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய அவரது நண்பர்கள் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை அம்பத்தூர் திருவள்ளுவர் நகர் அண்ணா 2–வது தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(வயது 42). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளது. தற்போது ஆட்டோ ஓட்டி வந்தார்.

நேற்று இரவு 9 மணியளவில் அரிகிருஷ்ணன், தனது நண்பர்களான கரிகாலன்(30), மணிவண்ணன், நெப்போலியன், தாஸ் உள்பட 5 பேருடன் சேர்ந்து அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினார்.

போதை தலைக்கேறியதில் நண்பர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த கரிகாலன் உள்ளிட்ட நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அரிகிருஷ்ணனை சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயம் அடைந்த அரிகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே நண்பர்கள் 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 5 பேரையும் தேடி வருகின்றனர்.

அவர்கள் கைதானால்தான் அரிகிருஷ்ணன் கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. மானாமதுரை டாஸ்மாக் கடையில் 3 மதுபாட்டில் வாங்கியவருக்கு ரூ.1000 அபராதம் விதித்த போலீசார்
மானாமதுரையில் டாஸ்மாக் கடையில் 3 மதுபாட்டில் வாங்கியவருக்கு போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர்.
2. கொள்ளிடம் அருகே பரபரப்பு: டாஸ்மாக் கடை கட்டும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்
கொள்ளிடம் அருகே டாஸ்மாக் கடை கட்டும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. டாஸ்மாக் கடைகளில் 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்படும் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
டாஸ்மாக் கடைகளில் 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
4. வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா?- மதுரை ஐகோர்ட் கிளை
வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா? என மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி விடுத்து உள்ளனர்.