எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீஸ் அதிகாரியின் மனைவியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு; வடமாநில வாலிபர் கைது
எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மனைவியிடம் தங்கச்சங்கிலி பறித்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
கோவை மாவட்டம் சரவணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது 70). இவர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் நந்தகுமார் தனது மனைவி சாரதாவுடன்(68) உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்னை வந்தார். பின்னர் சென்னையில் இருந்து கோவைக்கு நேற்று கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் செல்ல முன்பதிவு செய்திருந்தார்.
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் வந்த நந்தகுமார் மற்றும் சாரதா நடைமேடை 10-ல் இருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர். சாரதா எஸ்-10 பெட்டியில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் ரெயில் புறப்பட தொடங்கியவுடன் நடைமேடையில் நின்றிருந்த வடமாநில வாலிபர் ஒருவர் சாரதாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றார்.
இதையடுத்து நந்தகுமார் ரெயில்வே பாதுகாப்பு படை உதவி எண்-182 தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார், எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் 10-வது நடைமேடையில் இருந்து ரெயில் நிலையத்தின் வெளியே சென்றதும், பின்னர் உள்ளே வந்து நடைமேடை 3-ல் சுற்றித்திரிவதையும் போலீசார் கவனித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக் டர்கள் தாமஸ் ஜேசுதாசன் மற்றும் சிவனேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கொல்கத்தாவை சேர்ந்த ராகேஷ் மண்டல்(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story