ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி திருவாரூரில் மின் ஊழியர்்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திட்ட துணைத்தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு பேசினார்.
ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு ரூ.350 தினக்கூலியை வாரியமே நேரடியாக வழங்க வேண்டும். கேங்லீடர் பதவிக்கு ஒப்பந்த தொழிலாளர்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு தளர்த்தி முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மின் நீட்டிப்பு மற்றும் விஸ்தரிப்பு பணிகளுக்கு ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும். புதிய பிரிவு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதி நேர பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் திட்ட செயலாளர் ராஜேந்திரன், கோட்ட செயலாளர்கள் தமிழரசன் (திருவாரூர்), வீரபாண்டியன் (மன்னார்குடி), கோட்ட தலைவர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story