கூட்டணி அரசை காப்பாற்ற எந்த தியாகத்திற்கும் தயார் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


கூட்டணி அரசை காப்பாற்ற எந்த தியாகத்திற்கும் தயார் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 8 July 2019 4:00 AM IST (Updated: 8 July 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி அரசை காப்பாற்ற எந்த தியாகத்திற்கும் தயார் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் பிரதமர் தேகேவுடாவை, நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கூட்டணி அரசை காப்பாற்ற ஆலோசனை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பிரச்சினையை தீர்க்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன். கூட்டணி அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற எத்தகைய தியாகத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளோம். முதல்-மந்திரி குமாரசாமி இன்று (அதாவது நேற்று) இரவு பெங்களூரு வருகிறார். அவருடன் இந்த சிக்கல் குறித்து விவாதித்து தீர்வு காணப்படும். 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை வாபஸ் பெற வைக்க நாங்கள் தீவிர முயற்சி எடுத்துள்ளோம். ஆலோசனை கூட்டம் நடத்தி எந்த முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்வோம்.

இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.

Next Story