பெண்ணை கத்தியால் குத்தி 5 பவுன் நகை பறிப்பு: மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்
நாகர்கோவிலில் பெண்ணை கத்தியால் குத்தி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மேலராமன்புதூரை சேர்ந்தவர் ஜெலஷ்டின் சுபாஷ், கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தங்கராணி (வயது 39). இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு.
சம்பவத்தன்று இரவு தங்கராணி தன் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் தங்கராணியை கத்தியால் குத்திவிட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றார். இதில் படுகாயம் அடைந்த தங்கராணிக்கு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
போலீசார் தீவிரம்
இதுதொடர்பாக தங்கராணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்கராணி மழுப்பலான பதில்களையே போலீசாரிடம் தெரிவித்தார். எனினும் போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டார்கள். ஆனால் அவரது உடல் நிலை இன்னும் சரியாகாததால் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே தங்கராணியின் வீட்டுக்குள் புகுந்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை பிடித்தால் தான் சம்பவம் தொடர்பான முழுவிவரமும் தெரியவரும் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story