தி.மு.க. வாரிசு அரசியல் செய்து வருகிறது - திட்டக்குடியில் எச்.ராஜா பேட்டி
தி.மு.க. வாரிசு அரசியல் செய்து வருகிறது என்று திட்டக்குடியில் எச்.ராஜா கூறினார். பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா திட்டக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திட்டக்குடி,
தி.மு.க. வாரிசு அரசியல் செய்து வருகிறது. தி.மு.க. நடத்தும் பரம்பரை வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. முகிலன் ஆந்திராவில் நக்சலைட் முகாமில் தலைமறைவாக இருந்தார் என செய்திகள் வருகின்றன. முகிலனுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகம் ஆகும். அவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு பயந்து ஓடி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. திட்டக்குடியில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவன் கோவிலுக்கு தானமாக பெறப்பட்ட நிலங்களை கோவில் நிர்வாகத்திற்கு கொண்டு வந்து உரிய குத்தகையை வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மாவட்ட தலைவர் தாமரை மணிகண்டன், மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் அய்யப்பன்ரவி, மாவட்ட செயலாளர்கள் நரேந்திரன், சண்முகம், நகர தலைவர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில் பா.ஜ.க. கிளை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு, கட்சி கொடியேற்றினார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர், பா.ஜ.க.வில் இணைந்தனர். பின்னர் அங்குள்ள பிரச்சினைக்குரிய மாரியம்மன் கோவில் இடத்தை பார்வையிடுவதற்காக எச்.ராஜா சென்றார். அப்போது, அங்கு வந்த வேப்பூர் போலீசார், அந்த இடத்தை பார்வையிட செல்வதற்கு அனுமதி மறுத்தார். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story