வேடசந்தூர் அருகே, நடுரோட்டில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி


வேடசந்தூர் அருகே, நடுரோட்டில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
x
தினத்தந்தி 7 July 2019 11:00 PM GMT (Updated: 8 July 2019 12:09 AM GMT)

வேடசந்தூர் அருகே நடுரோட்டில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது.

வேடசந்தூர்,

தூத்துக்குடியில் இருந்து வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் ஒரு தனியார் மில்லுக்கு நூல் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. கன்டெய்னர் லாரியை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை சேர்ந்த அந்தோணிபிச்சை (வயது 45) என்பவர் ஓட்டினார். நேற்று காலை 9 மணிக்கு கன்டெய்னர் லாரி, திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில் காக்காத்தோப்பு பிரிவில் வேடசந்தூருக்குள் வருவதற்கு திரும்பியபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், இன்ஸ்பெக்டர் கோசலைராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். இதனால் கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் இணைப்பு சாலையின் வழியாக மாற்றி விடப்பட்டது. இதையடுத்து 4 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story