திண்டிவனம் அருகே, பெண், தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை


திண்டிவனம் அருகே, பெண், தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 9 July 2019 4:00 AM IST (Updated: 8 July 2019 11:18 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள காட்டுசிவிரி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 29), தொழிலாளி. இவருடைய மனைவி கு‌‌ஷ்பு(23). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளது. நேற்று காலை திடீரென கு‌‌ஷ்பு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கு‌‌ஷ்பு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கு‌‌ஷ்புவின் தாய் காமாட்சி வெள்ளிமேடுபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது மகள் சாவில் எனக்கு சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார். அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கு‌‌ஷ்பு குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story