வெவ்வேறு இடங்களில் பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை
நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
நெல்லை,
நெல்லையை அடுத்து சுத்தமல்லி கோமதி நகரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 58). தொழிலாளியான இவர், சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். பரமசிவத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேர்ந்தமரம் அருகே உள்ள வீரசிகாமணி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வேலம்மாள் (63). இவர் சம்பவத்தன்று விஷம் குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேலம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. அவருடைய மனைவி சுடலை (35). இவர் குடும்ப பிரச்சினையின் காரணமாக சம்பவத்தன்று விஷம் குடித்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சுடலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story