திருவாரூரில் பேட்டரி மூலம் இயங்க கூடிய குப்பை அள்ளும் வாகனங்கள் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்


திருவாரூரில் பேட்டரி மூலம் இயங்க கூடிய குப்பை அள்ளும் வாகனங்கள் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 July 2019 4:30 AM IST (Updated: 9 July 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் பேட்டரி மூலம் இயங்க கூடிய குப்பை அள்ளும் வாகனங்களை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.43 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான பேட்டரி மூலம் இயங்க கூடிய குப்பை அள்ளும் வாகனங்கள் தொடக்க விழா நடந்தது. வி்ழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு குப்பை அள்ளும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேம்படுத்திடவும், தற்போது பயன்பாட்டில் உள்ள தள்ளுவண்டிகள், மூன்று சக்கர சைக்கிள்கள் அல்லாமல் எளிதில் கையாளும் வகையில், அதிக எண்ணிக்கையில் குடியிருப்புகளில் உள்ள திடக்கழிவுகளை சேகரிக்கும் வகையில் பேட்டரி மூலம் இயங்க கூடிய மூன்று சக்கர குப்பை அள்ளும் 24 வாகனங்கள் வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு தலா ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நவீன மடக்கு சக்கர நாற்காலியும், எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளராக பணியில் இருந்த போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 6 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையையும் அமைச்சர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், உதவி கலெக்டர் முருகதாஸ், நகராட்சி ஆணையர் சங்கரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, மணிகண்டன், பன்னீர் செல்வம், நகராட்சி சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story