டி.என்.பாளையம் அருகே நிலத்தை சீர்படுத்த குளத்தில் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள்
டி.என்.பாளையம் அருகே நிலத்தை சீர்படுத்த குளத்தில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்து செல்கிறார்கள்.
டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளம், குட்டை, ஏரி, நீர் தேக்கங்களில் விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக அள்ளி செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் 1 ஏக்கருக்கு 25 டிராக்டர், புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் 1 ஏக்கருக்கு 30 டிராக்டர், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 10 டிராக்டர் என மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு உள்பட்ட குளம், குட்டை, ஏரிகளில் மண் எடுக்க அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி கடிதம் அளித்து உரிமை சான்று பெற்று அள்ளி செல்லலாம். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் தேக்கம், குளம், குட்டை ஏரிகளாக இருந்தால் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளரிடம் அனுமதி பெற்று மண் எடுக்கலாம்.
அதன் அடிப்படையில் விவசாயிகள் தங்கள் நிலத்தை சீர்படுத்த கோபி அருகே உள்ள பெருமுகை சஞ்சீவிராயன் குளத்தில் நேற்று முதல் வண்டல் மண் எடுத்து செல்கின்றனர்.

Related Tags :
Next Story