பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 9 July 2019 4:30 AM IST (Updated: 9 July 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நாகை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவரும், மாநில தணிக்கை குழு செயலாளருமான சங்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பரதன், பொருளாளர் அமிர்தம், துணைத்தலைவர்கள் கார்த்திகேயன், சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் பொதுப்பணி நிலைதிறன், பணியிடமாற்றம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டு, புதிய ஊதியம் வழங்க வேண்டும்.

கருணை ஓய்வு ஊதியம்

சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் இணை செயலாளர்கள் வெற்றிச்செல்வி, செந்தில்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story