தொழில்நெறி-திறன் வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
தொழில்நெறி- திறன் வாரத்தை முன்னிட்டு பெரம்பலூரில் நடந்த ஐ.டி.ஐ. மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்,
ஆண்டுதோறும் ஜூலை 2-வது வாரம் தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் நேற்று முதல் கடைபிடிக்கப்பட்டது. முதல் நாள் நிகழ்ச்சியான பாலக்கரையில் நடந்த தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வார விழிப்புணர்வு ஊர்வலத்தை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையம் வழியாக சென்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொழிற்பயிற்சி நிலையத்தை (ஐ.டி.ஐ.) சேர்ந்த மாணவ- மாணவிகள் “ராணுவத்தில் சேர்ந்திடுவீர், தேசத்தை காத்திடுவீர்”, “கல்வி என்பது முக்கியமானது மட்டும் அல்ல, வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவது ஆகும்” என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர்.
இதில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி முரளிதரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் செல்வகுமார், கவிதா, மாவட்ட திறன் அலுவலக உதவி இயக்குனர் செல்வம், பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் (பொறுப்பு) தொழில்பயிற்சி நிலைய முதல்வர் உதயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
மேலும், தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) மகளிருக்கான தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மற்றும் கல்லூரி படிப்பிற்கு பின் என்ன படிக்கலாம்? மற்றும் அரசால் வழங்கப்படும் கல்விக்கான ஊக்கத்தொகை குறித்தும், வினாடி- வினா, கட்டுரை எழுதுதல், சுலோகன் போட்டிகள் மாணவிகளிடையே நடத்தப்பட உள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டுதலுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இறுதியாக 12-ந் தேதி தொழில் பயிற்சி நிலையங்களில் பயின்று தொழில் முனைவோராக உள்ளவர்களை கொண்டு தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story