மாவட்ட செய்திகள்

திருமானூர் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த 4 பேர் கைது + "||" + Four persons arrested for stabbing and killing a worker near Thrimanoor

திருமானூர் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த 4 பேர் கைது

திருமானூர் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த 4 பேர் கைது
திருமானூர் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிகுழி கிராமத்தை சேர்ந்த செல்வராஜின் மகன் சரண்ராஜ்(வயது 29). கூலி தொழிலாளி. இவருக்கு சுதா(21) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் நேற்று இரவு கள்ளூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை வழி மறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சரண்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


4 பேர் கைது

விசாரணையில் உயிரிழந்த சரண்ராஜிக்கும், அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல்(55) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. அதன் காரணமாகவே ஜோதிவேலின் ஆதரவாளர்கள் சரண்ராஜை கொலை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் ஜோதிவேல், மோகன்(33), குணசேகரன், தனபால், சுந்தரராஜன், சூர்யா(25), அஜித்(24), மணிகண்டன், முத்துப்பாண்டி ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் சூர்யா, அஜித், மணிகண்டன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேரை தற்போது கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சிற்றம்பலம் அருகே குடிபோதையில் மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி கைது
திருச்சிற்றம்பலம் அருகே குடிபோதையில் மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
2. மனைவியை கொன்று உடலை கூறு போட்டவர் கைது
மனைவியை கொன்று உடலை கூறு போட்டவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு வாரமாக ‘பிரிட்ஜ்’க்குள் வைத்திருந்தது அம்பலமாகி உள்ளது.
3. பிரியாணி செய்து தராததால் ஆத்திரம்: மனைவியை தீவைத்து எரித்த தொழிலாளி கைது
கூத்தாநல்லூர் அருகே பிரியாணி செய்து தராததால் மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
4. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
5. டெல்லி அருகே மகன், மகளை கொன்று விட்டு தம்பதி தற்கொலை
டெல்லி அருகே மகன், மகளை கொன்று விட்டு, தம்பதி 8-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.