தொழில்நெறி- திறன் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


தொழில்நெறி- திறன் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 July 2019 10:45 PM GMT (Updated: 8 July 2019 7:33 PM GMT)

தொழில்நெறி- திறன் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் டி.ஜி.வினய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஐ.டி.ஐ. மாணவ- மாணவிகள் திறன் பயிற்சி மற்றும் தொழிற்நெறி விழிப்புணர்வு குறித்த சிற்றேடுகள் மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி சென்றனர். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி எகசானலி, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜ் மற்றும் மாணவ- மாணவிகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் பயிற்சியும், வருகிற 12-ந் தேதி தொழிற்பயிற்சி நிலையங்களில் திறன் பயிற்சிகள் வழங்குவது குறித்து தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் தொழில்முனைவோர் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. எனவே, மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் டி.ஜி.வினய் கேட்டுக்கொண்டார்.

Next Story