படப்பை அருகே செங்கல்லால் தாக்கி பெயிண்டர் கொலை


படப்பை அருகே செங்கல்லால் தாக்கி பெயிண்டர் கொலை
x
தினத்தந்தி 10 July 2019 3:15 AM IST (Updated: 9 July 2019 10:00 PM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே செங்கல்லால் தாக்கி பெயிண்டர் கொலை செய்யப்பட்டார்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த கரசங்கால் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 19). அதே பகுதியில் உள்ள விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். 2 நாட்களுக்கு முன்னர் இவர்களுடன் வேலை செய்து வரும் பாலாஜி என்பவருடைய பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வீட்டுக்கு வந்தார்.

கரசங்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், நைனி ஆகியோர் புஷ்பராஜ், ரவிச்சந்திரன் ஆகியோரை வழிமறித்து செங்கல்லால் தாக்கி உள்ளனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மணிமங்கலம் போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், புஷ்பராஜ் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் புஷ்பராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story