ஆட்சியில் இல்லை என்றாலும் ‘கல்வி வளர்ச்சிக்காக சட்டசபையில் குரல் கொடுத்து வருகிறோம்’ மு.க.ஸ்டாலின் பேச்சு
‘ஆட்சியில் இல்லை என்றாலும் கல்வி வளர்ச்சிக்காக சட்டசபையில் குரல் கொடுத்து வருகிறோம்’ என மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட, லூர்து மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரம்பூர் சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
லூர்து மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மாணவப்பருவம் என்பது நினைத்த நேரத்தில் கிடைக்கக் கூடிய பருவம் அல்ல. இத்தகைய மாணவப்பருவத்தில் தான் நம்முடைய அறிவை, கல்வியை, வளர்ச்சியை, ஆற்றலை வளர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம். கல்விக்கு எந்த அரசு முன்னுரிமை தருகிறதோ அந்த அரசு தான் நிலைத்து நின்று இருக்கிறது.
1989-90-ம் ஆண்டு தொடக்க காலத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டமன்றத்தில் பேசிய கன்னிப் பேச்சில் அப்போதைய தி.மு.க அரசிடம், கல்விக்கான பிரச்சினையை தான் முதன் முதலில் எடுத்துப் பேசினேன். மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்து பள்ளிக் கூடம் வந்து செல்ல இலவச பஸ் பாஸ் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எடுத்து வைத்தேன்.
அப்போது, ‘ஏற்கனவே போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக் கிறது, எனவே அது நடக்காது, முடியாது’ என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் திட்டவட்டமாக பதில் அளித்தார்.
ஆனால், முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, ‘உடனடியாக எழுந்து, எவ்வளவு நஷ்டம் வந்தாலும் எனக்கு கவலை இல்லை, மாணவர்களின் கல்வியின் தரம் உயர வேண்டும்’ எனக்கூறி மாணவர்களை ஊக்கப்படுத்த இலவச பஸ் பாஸ் திட்டம் ஒன்றை அறிவித்தார். அது இப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்ல கல்வி அனைவருக்கும் சமமாக இருந்திட வேண்டும் என்பதற்காக ‘சமச்சீர் கல்வி’ என்ற ஒரு அற்புதமான திட்டத்தை கருணாநிதி கொண்டுவந்து நிறைவேற்றித் தந்தார்.
இன்றைக்கு ஆட்சியில் இல்லை என்றாலும் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நாங்கள், சட்டமன்றத்தில் கல்வியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதே போன்று பெரம்பூர் டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியிலும் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் இலவச மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “மாணவர்கள் எந்த லட்சிய உணர்வை உள்ளத்தில் பதிய வைத்திருக்கிறீர்களோ, அந்த லட்சியம், கொள்கை நிறைவேற வேண்டும். அதில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் இருந்து கடமையை நிறைவேற்றுங்கள். நாட்டினுடைய வருங்காலம் நீங்கள் தான். எனவே, உங்களை எதிர் நோக்கித்தான் இந்த நாடு காத்திருக்கிறது” என்றார்.
இந்த நிகழ்ச்சிகளின் போது பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story