கிசான் சம்மான் திட்டத்தில் பயன்பெற 30 ஆயிரம் விவசாயிகள் விண்ணப்பம்
மத்திய அரசின் கிசான் சம்மான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற இதுவரை 30 ஆயிரத்து 847 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர்.
திருப்பூர்,
பாரத பிரதமரின் கிசான் திட்டமானது (கவுரவ ஊக்கத்தொகை) கடந்த 24-02-2019 அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், 4 மாதங்களுக்கு ஒரு முறை 3 தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டமானது தற்போது, சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமல்லாது பெருவிவசாயிகளும் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகள் பயனடையும் வகையில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பயனாளியாக தேர்வு செய்வதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யப்பட முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அனைத்து சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், 9 தாசில்தார் அலுவலகங்கள், 33 வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் 350 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து அவினாசி வட்டத்திற்கு உட்பட்ட சேவூர் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தண்டுக்காரன்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், திருப்பூர் தெற்கு வட்டத்திற்குட்பட்ட மங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் பல்லடம் வட்டத்திற்கு உட்பட்ட வேலம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமினை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்கள், விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார்கள் வாணி ஜெகதாம்பாள் (அவினாசி), மகேஸ்வரன் (திருப்பூர் தெற்கு), சாந்தி (பல்லடம்) மற்றும் சேவூர் நில வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நேற்று நடந்த முகாமில் ஆயிரத்து 605 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி மொத்தம் இதுவரை 30 ஆயிரத்து 847 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story