காரைக்குடி நகரில் குடிநீர் முறையாக வழங்க தி.மு.க. வலியுறுத்தல்
சிவகங்கை நகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை நகர் செயல்வீரர் கூட்டம் நகர் கழக செயலாளர் துரைஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, முன்னாள் நகர்மன்ற தலைவர் சாத்தையா, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஆதி அழகர்சாமி, நகர அவைத்தலைவர் மைமதர், நகர் கழக துணைச் செயலாளர்கள் வீனஸ் ராமநாதன், ஆறு சரவணன், நகர பொருளாளர் முத்துராக்கு, மாவட்ட பிரதிநிதி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:- தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்குவது. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்தமைக்கு, நகர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான கார்த்தி சிதம்பரம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த பொதுமக்களுக்கும், கட்சியினர்களுக்கும் நன்றி தெரிவிப்பது.
சிவகங்கை நகரில் குடிதண்ணீர் முறையாக ஒருநாள் விட்டு ஒருநாள் வினியோகிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story