கே.புதுப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கே.புதுப்பட்டியில் நடை பெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அரிமளம்,
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி கொங்கன் தெருவில் நொண்டி ஐயா கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை- அரிமளம் ரோட்டில் பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என மூன்று பிரிவாக போட்டி நடைபெற்றது. பெரியமாடு போகவர 8 கி.மீ. தூரமும், நடுமாடு போகவர 6 கி.மீ. தூரமும், சின்ன மாடு போக வர 5 கி.மீ. என போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெரிய மாடு பிரிவில் 9 மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை அறந்தாங்கி தினேஷ் கார்த்திக் மாட்டு வண்டியும், 2-வது பரிசை கே.புதுப்பட்டி கவுசல்யா மாட்டு வண்டியும், 3-வது பரிசை மருங்கூர் அப்துல்காதர் மாட்டு வண்டியும் பெற்றன.
பரிசு
நடுமாடு பிரிவில் 14 மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை திருச்சி கோபி மாட்டு வண்டியும், 2-வது பரிசை பொன்பேத்தி மருதுபாண்டி வெள்ளாளத்தேவர் மாட்டு வண்டியும், 3-வது பரிசை கருப்பூர் வீரையாசேர்வை மாட்டு வண்டியும் பெற்றன. சின்ன மாடு பிரிவில் 18 மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை காரைக்குடி ரிதன்யாஸ்ரீ மாட்டு வண்டியும், 2-வது பரிசை அரிமளம் அல்ஜெஸிஷா மாட்டு வண்டியும், 3-வது பரிசை பொன்பேத்தி மருதுபாண்டிய வெள்ளாளத்தேவர் மாட்டு வண்டியும் பெற்றன.
தொடர்ந்து வெற்றிபெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் ரொக்கபரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை அம்பலங்கள், விழா கமிட்டி யினர், கே.புதுப்பட்டி கொங்கன்தெரு பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை வழிநெடுங்கிலும் நின்று ஏராளமானோர் கண்டுகளித்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வருகிற 12-ந் தேதி இரவு 10 மணிக்கு கபடி போட்டி கோவில் முன்பாக நடைபெற உள்ளது.

Related Tags :
Next Story