சேரன்மாதேவி அருகே குடிமராமத்து பணியை கலெக்டர் ஷில்பா ஆய்வு
சேரன்மாதேவி அருகே குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
சேரன்மாதேவி,
குடிமராமத்து திட்டத்தில் சேரன்மாதேவி முதல் கொழுமடை பகுதி வரை கன்னடியன் கால்வாய் மடைகளையும், கரைகளையும் சீரமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம் சேரன்மாதேவி அருகே பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அப்போது கொழுமடை பகுதியில் உள்ள கன்னடியன் கால்வாயில் ரூ.98 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர், விவசாயிகளின் நலன் கருதி வகுத்த சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி வடிநில கோட்ட பகுதியில் ரூ.21 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் 84 பணிகளும், தென்காசி சிற்றாறு வடிநில கோட்ட பகுதியில் ரூ.24 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் 90 பணிகளும், கோதையாறு வடிநில கோட்ட பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 1 பணியும், வைப்பாறு வடிநில கோட்ட பகுதியில் ரூ.3 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் 10 பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது சிற்றாறு வடிநில கோட்ட பொறியாளர் ஜெயபால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், சேரன்மாதேவி தாசில்தார் சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story