திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கார் டிரைவர் சாவு


திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கார் டிரைவர் சாவு
x
தினத்தந்தி 10 July 2019 3:15 AM IST (Updated: 10 July 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கார் டிரைவர் இரும்பு தடுப்பில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

திசையன்விளை,

திசையன்விளை அருகே உள்ள விஜய அச்சம்பாடு நடுத்தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ்நாடார். இவரது மகன் வினோத்குமார் (வயது 23). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் நேற்று முன்தினம் உவரியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் கொடை விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது கோவில் மேளக்கலைஞர்களுக்கு திசையன்விளையில் சென்று உணவு வாங்கி கொண்டு உவரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

உவரி சாலையில் உள்ள மாதா கோவில் கெபி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபின்சாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story