வருவாய்த்துறையின் சான்றிதழ் பெற விடுமுறை நாட்களில் 270 பேர் விண்ணப்பம்; கலெக்டர் அருண் தகவல்
வருவாய்த்துறையின் சான்றிதழை பெற விடுமுறை நாளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 270 பேர் விண்ணப்பித்துள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவை அரசின் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் இருப்பிடம், வருமானம், குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்த சான்றிதழ்களை தாசில்தார் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்து பெறும் முறை இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறும் முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து தற்போது சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் புதுவை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் அருண் நேற்று பிற்பகலில் ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்தின் ஒவ்வொரு பிரிவாக சென்று பார்வையிட்டார். மேலும் தாசில்தார் அலுவலகத்துக்கு சான்றிதழ் பெற வந்திருந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடமும் கருத்து கேட்டார்.
அதுமட்டுமின்றி சான்றிதழ்கள் பெறுவதற்காக தாசில்தார் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தையும் அவர் பார்வையிட்டார். அங்கிருந்த ஊழியர்களிடம் ஆன்லைன் விண்ணப்பங்களின் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வு குறித்து கலெக்டர் அருண் கூறியதாவது:-
ஆன்லைன் மூலம் வருவாய்த்துறையின் சான்றிதழ்களை பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே விண்ணப்பித்து பெறும் முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி விண்ணப்பித்து சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.
தாலுகா அலுவலகங்களிலும் இதற்காக தனியாக உதவி மையம் வைத்துள்ளோம். அங்கு வருவாய்த்துறை ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். பொதுமக்கள் இங்கு இலவசமாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது போலி சான்றிதழ்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
தாலுகா அலுவலகம் வந்து விண்ணப்பிப்போர்களுக்கு ரசீதும் வழங்கப்படும். அவர்களது செல்போனுக்கு குறுந்தகவலும் அனுப்பப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப் பதால் பொதுமக்களுக்கு நிறைய சவுகரியங்கள் உள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்களிலும் அவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களில் 270 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.

Related Tags :
Next Story