மருத்துவ படிப்பில் சேருவதற்கான சென்டாக் தரவரிசை பட்டியல் வெளியீடு
மருத்துவ படிப்பில் சேருவதற்கான சென்டாக் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவை சென்டாக் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்வதற்கான வரைவு தரவரிசை பட்டியல் தெலுங்கு மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், பி.டெக், பி.எஸ்.சி. வேளாண்மை ஆகிய படிப்புகளுக்கு அயல்நாட்டு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதியவர்களில் 11 ஆயிரத்து 544 பேர் விண்ணப்பித்தனர். அதில் 11 ஆயிரத்து 163 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. போதிய கட்ஆப் மதிப்பெண் இல்லாததால் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. 1,671 பேர் தங்களது விருப்பங்களை தெரிவிக்கவில்லை. அவர்கள் சென்டாக் இணையதளத்தில் தங்களது விருப்பத்தை தெரிவிக்கவேண்டும். பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை எம்.பி. பி.எஸ். பாடப்பிரிவில் பெற விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் இதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story