பரமத்தி, கபிலர்மலை, எருமப்பட்டி பகுதிகளில் மத்திய நீர் மேலாண்மை குழுவினர் ஆய்வு
பரமத்தி, கபிலர்மலை மற்றும் எருமப்பட்டி பகுதிகளில் மத்திய நீர் மேலாண்மை குழுவினர் நீர் மேலாண்மை திட்டங்களை ஆய்வு செய்தனர்.
பரமத்தி வேலூர்,
மத்திய அரசின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நீர் மேலாண்மை துறை (ஜல்சக்தி அபியான்) மூலமாக நீர் மேலாண்மை திட்டங்களை உருவாக்குவதற்காக நாமக்கல் மாவட்டத்தில் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நீர் மேலாண்மை திட்டங்களை மத்திய அரசு அதிகாரிகள் 13 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய நீர்வள ஆராய்ச்சி நிறுவன தொழில்நுட்ப அலுவலர் வைத்யா மற்றும் மத்திய அரசு துணை செயலாளர் தீப்தா பானுதாஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் பரமத்தி ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேவராஜ் என்பவர் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள 18 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி, நடந்தை பகுதியில் சொட்டுநீர் பாசனம், புளியம்பட்டி பகுதியில் தனிநபர் உறிஞ்சி குழி, சமுதாய உறிஞ்சி குழி, வீரணம்பாளையம் பகுதியில் நாற்றங்கால் உற்பத்தி செய்தல், அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை நீர் தொட்டி உள்ளிட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கபிலர்மலை ஒன்றியம் இருக்கூர் பகுதியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் சொட்டுநீர் பாசனம், கோப்பணம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கல் தடுப்பணைகள், கொந்தளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிநபர் பண்ணை குட்டை மற்றும் தனிநபர் நீர்தேக்க தொட்டி, பிலிக்கல்பாளையம் ஊராட்சி மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை, நீர் செரிவூட்டம் கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன், பாண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) கீதா உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதேபோல எருமப்பட்டி பகுதியிலும் நீர் மேலாண்மை குழுவினர் திட்டங்களை ஆய்வு செய்தனர். இதையொட்டி ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, அலங்காநத்தம், மற்றும் எருமப்பட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் சேமிப்பு தொட்டிகள், தனிநபர் மழைநீர் சேமிப்பு தொட்டிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கட்டப்பட்ட தடுப்பணைகள் உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், எருமப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோ, எருமப்பட்டி வட்டார பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் குணசேகரன், எருமப்பட்டி பணி மேற்பார்வையாளர் நவலடியான், முருகேசன் மற்றும் பலர் உடன் சென்றனர்.

Related Tags :
Next Story