ஆட்டோ டிரைவர்- உரிமையாளர் நலவாரியம் விரைவில் அமைக்கப்படும் முதல்-மந்திரி பட்னாவிஸ் உறுதி
மராட்டியத்தில் விரைவில் ஆட்டோ டிரைவர்- உரிமையாளர் நலவாரியம் அமைக்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் விரைவில் ஆட்டோ டிரைவர்- உரிமையாளர் நலவாரியம் அமைக்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்து உள்ளார்.
ஆட்டோ டிரைவர்கள்
மராட்டியத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. தலைநகர் மும்பையில் 2 லட்சம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. இந்தநிலையில், ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும், தங்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ஆட்டோ யூனியன் பிரதிநிதிகளுக்கு, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்தநிலையில் நேற்று ஆட்டோ யூனியன் பிரதிநிதிகளுடன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்.
நலவாரியம் அமைக்கப்படும்
இதுபற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் குறைகளை களைவதற்காக விரைவில் நலவாரியம் அமைக்கப்படும். இது தொடர்பாக ஒரு வாரத்தில் அரசு பிரதிநிதிகள் கூட்டுக்குழு மற்றும் ஆட்டோ யூனியன் பிரநிதிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இந்த குழு பரிந்துரைக்கு பின் விரைவில் நலவாரியம் அமைக்கப்படும். பட்ஜெட்டிலும் ஆட்டோ டிரைவர்- உரிமையாளர் நலவாரியத்துக்கு நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story