சகாப்பூர் தொகுதியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா சிவசேனாவில் சேருகிறார்
சகாப்பூர் தொகுதியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாண்டுரங்க் வரோரா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் சிவசேனாவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை,
சகாப்பூர் தொகுதியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாண்டுரங்க் வரோரா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் சிவசேனாவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜினாமா
தானே மாவட்டம் சகாப்பூர் தொகுதியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாண்டுரங்க் வரோரா. இவர் நேற்று திடீரென தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஹரிபாவு பாக்டேவை நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது சிவசேனாவை சேர்ந்த பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் உடன் இருந்தார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவசேனாவில் சேருவதற்காக அவர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இன்று (புதன்கிழமை) அவர் மாதே இல்லத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து அக்கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
பலம் குறைந்தது
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் 41 எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்று இருந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் சோலாப்பூர் மாவட்டம் மால்சிராஸ் தொகுதி எம்.எல்.ஏ. ஹனுமன்த் தோல்ஸ் உயிரிழந்தார். தற்போது எம்.எல்.ஏ. பாண்டுரங் வரோராவும் ராஜினாமா செய்துள்ளதால், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 39-ஆக குறைந்துள்ளது.
Related Tags :
Next Story