செருப்பு கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு? சேலம் கோட்டையில் பரபரப்பு


செருப்பு கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு? சேலம் கோட்டையில் பரபரப்பு
x
தினத்தந்தி 10 July 2019 4:15 AM IST (Updated: 10 July 2019 6:00 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கோட்டையில் செருப்பு கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், 

சேலம் கோட்டை சின்னசாமி தெருவை சேர்ந்தவர் கபீர் அகமது. இவர் புதிய பஸ்நிலையம் அருகே செருப்பு கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவில் வீட்டின் முன் பகுதியில் பாட்டில் ஒன்று விழுந்து வெடித்தது. இந்த சத்தத்தை கேட்டு கபீர் அகமது அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் ஸ்கீரின் துணி எரிந்த நிலையில் இருந்தது.

இதுகுறித்து நேற்று கபீர் அகமது சேலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கபீர் குடும்பத்தினர் உடைந்த பாட்டிலில் இருந்து பெட்ரோல் வாசம் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

மேலும் கபீர் அகமது வீட்டின் முன்பு தினமும் சிலர் மது அருந்தி வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அதிக நேரம் அங்கிருந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதனால் அவர் தூங்க முடியாமல் அவதி பட்டு வந்தார். இதனால் அவர் ஏன்? வீட்டின் முன்பு இவ்வாறு செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் அந்த நபர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலர் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசி சென்று இருக்கலாம் என தெரிகிறது என்று போலீசார் கூறினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story