வானவில் : உணவுப் பொருள் கலக்கி


வானவில் : உணவுப் பொருள் கலக்கி
x
தினத்தந்தி 10 July 2019 4:27 PM IST (Updated: 10 July 2019 4:27 PM IST)
t-max-icont-min-icon

இல்லத்தரசிகளின் வேலைப் பளுவை குறைக்க வந்துள்ள நவீன சாதனங்களுள் ஒன்றுதான் உணவுப் பொருள் கலக்கி.

சமையலறையில் உணவுப் பொருட்களை அதன் பக்குவம் கெடாமல் சமைப்பது என்பதே தனிக் கலை. அதுவும் சிறப்பு உணவுகள் தயாரிப்பதற்கு அதிக நேரம் ஆகும். இல்லத்தரசிகளின் வேலைப் பளுவும் அதிகரிக்கும். இதுபோன்ற பணிகளை குறைக்க வந்துள்ள நவீன சாதனங்களுள் ஒன்றுதான் உணவுப் பொருள் கலக்கி. ‘சகி ஆட்டோமேடிக் பாட் மிக்ஸர்’ என்ற பெயரில் இது வந்துள்ளது. சூப், பாயசம், ஸ்டூ, சாஸ் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கும்போது தொடர்ந்து கிளறாவிடில் பாத்திரத்தின் அடியில் தங்கி தீய்ந்துவிடும். இதனால் உணவின் சுவை கெட்டு அது சாப்பிட முடியாமல் போய்விடும். தொடர்ந்து கிளறுவது என்பது சலிப்பான அதேசமயம் கை வலியை ஏற்படுத்தும் விஷயமாகும். இதைப் போக்குகிறது சகி.

நீங்கள் தயாரிக்க வேண்டிய பாயசம் அல்லது சூப் பாத்திரத்தை தேர்வு செய்து அதன் உயரத்திற்கேற்ப அட்ஜெஸ்ட் செய்து பாத்திரத்தில் பொருத்திவிட வேண்டும். பிறகு உணவுப் பொருட்களை கிளற வேண்டிய சமயத்தில் இதன் மேலுள்ள பொத்தானை அழுத்தினால் அது கிளற தொடங்கும். இதனால் பொருள் கீழே தங்கி தீய்ந்து விடுவதை தடுக்கும்.

இதனால் உணவுப் பொருளும் கெடாது. பாத்திரமும் கெட்டுப் போகாது. தானாக சுழற்சியை அளிக்க இதில் சார்ஜரில் இயங்கும் மோட்டார் உள்ளது. எத்தகைய பாத்திரத்திலும் இதைப் பயன்படுத்த முடியும். பொருளைக் கிளறும் வேகத்தை இரண்டு வகையில் தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். கஞ்சி, போரிட்ஜ், கிரேவி, சாஸ், கஸ்டர்ட் போன்றவை தயாரிக்க அதிகம் கிளற வேண்டும். அதற்கும் இது மிகவும் உபயோகமானதாக இருக்கும். இதன் விலை ரூ.6,000.

Next Story