வானவில் : ஸ்டார்ம் சிட்டி பேட்டரி சைக்கிள்
நகர்ப்புற போக்குவரத்துக்கு ஏற்றது சைக்கிள்தான் என்ற நிலை வந்துவிட்டது.
மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டரில் பயணித்தவர்களுக்கு மீண்டும் சைக்கிளுக்கு திரும்புவது சற்று கடினமான விஷயம்தான். அனைத்துக்கும் மேலாக இப்போது உடற்பயிற்சி இல்லாததால் ஏற்படும் உடல் கோளாறுகளுக்கு தீர்வாக சைக்கிள் ஓட்டுவது மாறி வருகிறது. இதனால் ஜிம்முக்கு சென்று ஓடாத சைக்கிளை மிதித்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதை விட அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிளில் சென்று வரலாம் என்ற மனோபாவம் அதிகரித்து வருகிறது.
அவ்விதம் திட்டமிடுவோருக்கு சற்று வசதியான பேட்டரி சைக்கிள் மிகச் சிறந்த தீர்வாக அமையும். மேலை நாடுகளில் இப்போது காரில் செல்வோரைக் காட்டிலும் சைக்கிளில் செல்வோருக்கு மதிப்பு அதிகரித்து வருகிறது.
டென்மார்க்கைச் சேர்ந்த நிறுவனம் ஸ்டார்ம் சிட்டி என்ற பெயரில் பேட்டரியில் ஓடக் கூடிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.70,000. 30 நாடுகளில் இந்த பேட்டரி சைக்கிளுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அழகிய சீட், ஒருங்கிணைந்த லைட், யு.எஸ்.பி. சார்ஜர், பேட்டரி அளவை வெளிக்காட்டும் டிஸ்பிளே, பஞ்சராகாத டயர்கள், கழற்றி எடுத்துச் சென்று சார்ஜ் செய்யும் வசதி கொண்ட பேட்டரி (10 ஏ.ஹெச்.) அமைப்பு, டிஸ்க் பிரேக் ஆகியன இதன் சிறப்பம்சமாகும். எடைகுறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக உறுதியான அலுமினியத்தால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதில் 7 ஸ்பீடு கியர்கள் உள்ளதால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். ஒரு விநாடி நேரத்திலேயே இது 32 கி.மீ. வேகத்தை எட்டும் அளவுக்கு மிகச் சிறப்பான மோட்டாரைக் கொண்டுள்ளது.
நகர்ப்புற போக்குவரத்துக்கு சூழல் பாதிப்பில்லாத இந்த சைக்கிள் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பலாம்.
Related Tags :
Next Story