மாவட்ட செய்திகள்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: கல்லூரி மாணவி தற்கொலை புதுக்கடை அருகே பரிதாபம் + "||" + Parental opposition to love: College student suicide near Pudukkadai

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: கல்லூரி மாணவி தற்கொலை புதுக்கடை அருகே பரிதாபம்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: கல்லூரி மாணவி தற்கொலை புதுக்கடை அருகே பரிதாபம்
புதுக்கடை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கடை,

புதுக்கடை அருகே வேங்கோடு மேலக்கோட்டவிளையை சேர்ந்தவர் மரிய அருளப்பன். இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகளின் பெயர் அஜீஸ் சஜிலின் லதா (வயது 17). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.


இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதல் விவகாரம் அரசபுரசலாக அஜீஸ் சஜிலின் லதாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. உடனே, அவர்கள் தங்களுடைய மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயத்தில் மகளை கண்டித்ததாகவும் தெரிகிறது.

படிக்க வேண்டிய வயதில் உனக்கு படிப்பு மட்டுமே முக்கியம், மற்ற வி‌ஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால், அஜீஸ் சஜிலின் லதாவால் காதலை மறக்க முடியவில்லை. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த புதுக்கடை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஜிஸ் சஜிலின் லதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இதுதொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தை விபத்தில் சிக்கியதாக கூறி பள்ளியில் இருந்து மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு அடி-உதை
குடியாத்தம் அருகே பள்ளியில் இருந்து மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
2. தம்மம்பட்டியில் மேற்படிப்பு படிக்க வசதி இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை
தம்மம்பட்டியில் பட்ட மேற்படிப்பு படிக்க வசதி இல்லாததால் பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. மனைவியுடன் பால் வியாபாரி தற்கொலை மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் விபரீதமுடிவு
மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாத விரக்தியில் மனைவியுடன் பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. திருமானூர் அருகே தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை
திருமானூர் அருகே தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. சரியாக படிக்காததை தாயார் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
சிவகிரி அருகே சரியாக படிக்காததை தாயார் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.