வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலையொட்டி 18 இன்ஸ்பெக்டர், 97 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலையொட்டி 18 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 97 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்தமாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் 18 இன்ஸ்பெக்டர்கள், 97 சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டுள்ளார். அவர்கள் விவரம் வருமாறு:-
அதன்படி போளூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு பொன்னைக்கும், திருவண்ணாமலை மாவட்ட கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி குடியாத்தம் கலால் பிரிவுக்கும், தண்டராம்பட்டு செங்குட்டுவன் வாணியம்பாடி கலால் பிரிவுக்கும், திருவண்ணாமலை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கவிதா குடியாத்தம் அனைத்து மகளிருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
செங்கம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் புனிதா வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், போளூர் மகளிர் இன்ஸ்பெக்டர் பேபி அரக்கோணம் மகளிருக்கும், கடலூரில் பணிபுரியும் பட்டாபிராமன் சோளிங்கருக்கும், வாணியம்பாடி கலால் பிரிவு சசிக்குமார் தெள்ளாருக்கும் மாற்றப்பட்டுள்ளார்கள்.
குடியாத்தம் கலால் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மேல்செங்கத்திற்கும், வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் போளூருக்கும், தெள்ளார் தனலட்சுமி திருப்பத்தூர் கலால் பிரிவுக்கும், அரக்கோணம் மகளிர் இன்ஸ்பெக்டர் பாரதி தண்டராம்பட்டுக்கும், வேலூர் மகளிர் இன்ஸ்பெக்டர் அழகுராணி சத்துவாச்சாரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோன்று 97 சப்-இன்ஸ்பெக்டர்களையும் பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story