மாவட்ட செய்திகள்

சேலத்தில் பழக்கடை உரிமையாளரிடம்போலி தங்க குண்டுமணி மாலை கொடுத்து ரூ.2 லட்சம் மோசடிபெண் உள்பட 3 பேர் கைது + "||" + Giving a fake golden bullet wreath Rs 2 lakh fraud

சேலத்தில் பழக்கடை உரிமையாளரிடம்போலி தங்க குண்டுமணி மாலை கொடுத்து ரூ.2 லட்சம் மோசடிபெண் உள்பட 3 பேர் கைது

சேலத்தில் பழக்கடை உரிமையாளரிடம்போலி தங்க குண்டுமணி மாலை கொடுத்து ரூ.2 லட்சம் மோசடிபெண் உள்பட 3 பேர் கைது
சேலத்தில் பழக்கடை உரிமையாளரிடம் போலி தங்க குண்டுமணி மாலை கொடுத்து ரூ.2 லட்சம் மோசடி செய்த புகாரில் பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், 

சேலம் அஸ்தம்பட்டி மரவனேரி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 35). இவர், அப்பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது கடைக்கு ஒரு பெண் வந்து, தன்னிடம் 2 கிலோ எடையுள்ள தங்க குண்டுமணி மாலை உள்ளதாகவும், தற்போது அதை விற்பனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அவர், அதை வாங்க முடிவு செய்துள்ளார். அப்போது, 350 மில்லி கிராம் எடை கொண்ட சிறிய தங்க குண்டுமணியை அந்த பெண் முதலில் கொடுத்தார். அதை ரவிச்சந்திரன் வாங்கி சோதனை செய்தபோது, அது சுத்தமான தங்கம் என்று தெரிய வந்ததால் அதற்கான பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து நகையை வாங்கினார்.

இந்தநிலையில், மேலும், ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க குண்டுமணிகள் தன்னிடம் இருப்பதாகவும், தனது மகள் திருமண செலவுக்காக அதனை விற்க உள்ளதாகவும் அந்த பெண், ரவிச்சந்திரனிடம் கூறினார். அப்போது, அந்த அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய அவர், ரூ.2 லட்சத்தை மட்டும் கொடுத்தார்.

இதையடுத்து ஒரு தங்க குண்டுமணியை மீண்டும் அந்த பெண் கொடுத்துள்ளார். பின்னர் அந்த தங்கத்தை அவர் பரிசோதனை செய்தபோது, அது போலி தங்கம் என்பதும், பித்தளையை கொடுத்து மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த பெண்ணை தொடர்ந்து தேடி வந்ததாக தெரிகிறது.

இதனிடையே, அந்த பெண் மேலும் 2 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் சேலம் அழகாபுரம் பகுதியில் தங்க கட்டிகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபடுவதாக ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் இதுபற்றி அழகாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் உடனே அங்கு விரைந்து சென்று அந்த 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த லட்சுமி பாய் (50), கிஷோர் பர்மா (22), பிரபு (20) ஆகியோர் என்பதும், இவர்கள் போலியான நகையை கொடுத்து உண்மையான தங்கம் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமிபாய் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் சேலம், ஈரோடு, கோவை உள்பட பல ஊர்களில் இதேபோல், தங்க குண்டுமணி மாலை கொடுத்து பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.